15 வழிபாட்டுக் கூடாரம், அதாவது சாட்சிப் பெட்டியின் கூடாரம், அமைக்கப்பட்ட நாளில்+ அதன்மேல் மேகம் தங்கியது. ஆனால், சாயங்காலத்திலிருந்து காலைவரை அது நெருப்புபோல் தெரிந்தது.+
8 அந்தச் சமயத்தில், கடவுளுடைய மகிமையாலும் அவருடைய வல்லமையாலும் பரிசுத்த இடம் புகையால் நிறைந்தது.+ அந்த ஏழு தேவதூதர்களுடைய ஏழு தண்டனைகள்+ முடியும்வரை ஒருவராலும் அந்தப் பரிசுத்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை.