-
அப்போஸ்தலர் 7:30-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 40 வருஷங்களுக்குப் பின்பு, சீனாய் மலைக்குப் பக்கத்திலிருந்த வனாந்தரத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முட்புதர் நடுவில் ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றினார்.+ 31 மோசே அந்தக் காட்சியைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். அதைக் கூர்ந்து கவனிப்பதற்காக அதன் பக்கத்தில் போனபோது, யெகோவா* அவரிடம், 32 ‘நான் உன்னுடைய முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுளாக இருக்கிறேன்’+ என்று சொன்னதைக் கேட்டு நடுநடுங்கிப்போனார். அதன் பின்பு, அந்த முட்புதரைக் கூர்ந்து கவனிக்க அவருக்குத் தைரியம் வரவில்லை. 33 அப்போது யெகோவா* அவரிடம், ‘உன் செருப்பைக் கழற்று, ஏனென்றால் நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது. 34 எகிப்தில் என்னுடைய மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நான் கண்ணால் பார்த்தேன், அவர்கள் வேதனையில் குமுறுவதைக் கேட்டேன்;+ அதனால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்’ என்று சொன்னார்.
-