3மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார்.
12 அதற்கு அவர், “நான் உன்னோடு இருப்பேன்.+ என்னுடைய ஜனங்களை எகிப்திலிருந்து நீ கூட்டிக்கொண்டு வந்த பின்பு, உண்மைக் கடவுளாகிய என்னை நீங்கள் எல்லாரும் இந்த மலையில் வணங்குவீர்கள்.+ நான்தான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.