35 யெகோவாவாகிய நான் இதைச் சொல்லியிருக்கிறேன். எனக்கு எதிராக ஒன்றுகூடிய இந்தப் பொல்லாத ஜனங்களை நான் தண்டிப்பேன். இந்த வனாந்தரத்தில் அவர்களுக்கு முடிவு வரும், இங்கேயே அவர்கள் செத்துப்போவார்கள்.+
19 அதற்கு யோசுவா ஜனங்களிடம், “உங்களால் யெகோவாவை வணங்க முடியவில்லை. ஏனென்றால், அவர் பரிசுத்தமுள்ள கடவுள்,+ எல்லாரும் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள்.+ அவர் உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் மன்னிக்க மாட்டார்.+