-
லேவியராகமம் 16:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பாவப் பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் தகன பலிக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.+
6 பின்பு, ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும்+ தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.
-
-
லேவியராகமம் 16:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பின்பு, யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்துக்கு+ வந்து அதைச் சுத்திகரிக்க வேண்டும். காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் இருக்கிற கொம்புகள்மேல் பூச வேண்டும். 19 அந்த இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன்னுடைய விரலில் தொட்டு பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, இஸ்ரவேலர்கள் செய்கிற அசுத்தமான செயல்களிலிருந்து அதைச் சுத்திகரித்து புனிதப்படுத்த வேண்டும்.
-