-
யாத்திராகமம் 35:30-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு மோசே இஸ்ரவேலர்களிடம், “யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ 31 அவரைத் தன்னுடைய சக்தியால் நிரப்பி, எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், 32 கலை வேலைப்பாடுகள் செய்யவும், தங்கம், வெள்ளி, செம்பு வேலைகள் செய்யவும், 33 கற்களைப் பட்டைதீட்டி அவற்றைப் பதிக்கவும், எல்லாவித மர வேலைப்பாடுகள் செய்யவும் அவருக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அறிவையும் தந்திருக்கிறார். 34 கற்பிக்கும் திறமையை பெசலெயேலுக்கும் தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாபுக்கும்+ கடவுள் தந்திருக்கிறார்.
-