12 யெகோவா மோசேயிடம், “நீ மலைமேல் ஏறி என்னிடம் வந்து இங்கேயே தங்கியிரு. ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களையும் கட்டளைகளையும் நான் கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்” என்றார்.+
15 அதன்பின், மோசே இரண்டு சாட்சிப் பலகைகளையும்+ கையில் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.+ அந்தக் கற்பலகைகளின் இரண்டு பக்கங்களிலும், அதாவது முன்புறத்திலும் பின்புறத்திலும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
13 நீங்கள் கடைப்பிடிப்பதற்காக பத்துக் கட்டளைகளைக்+ கொடுத்து, உங்களோடு ஒரு ஒப்பந்தத்தை அவர் செய்தார்.+ பின்பு, அந்தக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.+
15 அதற்குப் பின்பு, மலையிலிருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது அந்த மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.+ ஒப்பந்தம் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை என்னுடைய கைகளில் வைத்திருந்தேன்.+