4 என் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்து, என் ஜனங்களுடைய பாவங்களை ஒத்துக்கொண்டேன். அந்த ஜெபத்தில்,
“உண்மைக் கடவுளாகிய யெகோவாவே, அதிசயமும் அற்புதமுமானவரே, உங்கள்மேல் அன்புவைத்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் மாறாத அன்பைக் காட்டுபவரே,+ ஒப்பந்தத்தைக் காப்பவரே,+