-
லேவியராகமம் 12:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ பெற்றவள் தன்னுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்ததும், ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ ஒரு புறாக் குஞ்சை அல்லது காட்டுப் புறாவைப் பாவப் பரிகார பலியாகவும் கொண்டுவர வேண்டும். அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.
-
-
லேவியராகமம் 22:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் எல்லா இஸ்ரவேலர்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற வேறு தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அல்லது தானாகவே விருப்பப்பட்டு காணிக்கை செலுத்த+ யெகோவாவுக்குத் தகன பலியைக்+ கொண்டுவந்தால், 19 குறையில்லாத காளையையோ+ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாவையோ கொண்டுவர வேண்டும். அப்போதுதான், கடவுள் அதை ஏற்றுக்கொள்வார். 20 குறையுள்ள எதையும் நீங்கள் செலுத்தக் கூடாது.+ ஏனென்றால், கடவுள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
-