-
லேவியராகமம் 4:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பின்பு, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளையின் கொழுப்பு முழுவதையும் அவர் எடுக்க வேண்டும். குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும், 9 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், எடுக்க வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுக்க வேண்டும்.+ 10 சமாதான பலிக்காகச் செலுத்தப்படுகிற காளையிலிருந்து அவற்றை எடுப்பது போலவே இந்தக் காளையிலிருந்தும் எடுக்க வேண்டும்.+ பின்பு, குருவானவர் தகன பலிக்கான பலிபீடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.
-
-
1 சாமுவேல் 2:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அதற்கு அந்த நபர், “அவர்கள் முதலில் கொழுப்பைத் தகனிக்கட்டும்,+ பின்பு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்வார். ஆனால் அந்தப் பணியாள், “வேண்டாம், இப்போதே தா. நீ தராவிட்டால், நானே எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான். 17 இப்படி, அந்தப் பணியாட்களும் யெகோவாவின் பார்வையில் மிக மோசமான பாவத்தைச் செய்தார்கள்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட பலியை அந்த ஆட்கள் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.
-