-
யாத்திராகமம் 29:15-18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 பின்பு, அந்தச் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவா. அதன் தலைமேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் கைகளை வைக்க வேண்டும்.+ 16 நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி.+ 17 செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் குடல்களையும் கால்களையும் கழுவு.+ அதன் தலையையும் மற்ற எல்லா துண்டுகளையும் அதனதன் இடத்தில் வை. 18 முழு செம்மறியாட்டுக் கடாவையும் பலிபீடத்தின் மேல் வைத்து எரித்துவிடு. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலி.
-
-
லேவியராகமம் 1:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 தகன பலியாகச் செலுத்தப்படும் காளையின் தலையில் அவன் தன்னுடைய கையை வைக்க வேண்டும். அது அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
-