21 பின்பு, பலிபீடத்தின் மேலுள்ள அந்த இரத்தத்தில் கொஞ்சத்தையும் அபிஷேகத் தைலத்தில்+ கொஞ்சத்தையும் எடுத்து, அவற்றை ஆரோன்மேலும் அவனுடைய உடைகள்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகள்மேலும் தெளி. அப்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தமாவார்கள், அவர்களுடைய உடைகளும் பரிசுத்தமாகும்.+