23 அம்மினதாபின் மகளும் நகசோனின்+ சகோதரியுமான எலிசபாளை ஆரோன் கல்யாணம் செய்தார். நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்+ என்ற மகன்களை அவள் அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.
2 நாதாபும் அபியூவும் அவர்களுடைய அப்பாவுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.+ அவர்களுக்கு மகன்கள் இல்லை. ஆனால், எலெயாசாரும்+ இத்தாமாரும் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.