-
ஆதியாகமம் 17:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இனிவரும் காலமெல்லாம் உன்னுடைய சந்ததியில் பிறக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ உன் வீட்டில் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளும், உன் சந்ததியில் வராத எல்லா ஆண்களும், மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகிற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.
-
-
லூக்கா 2:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாவது நாள்+ வந்தது; அது தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்பு தேவதூதர் சொல்லியிருந்தபடியே அதற்கு இயேசு என்ற பெயர் வைக்கப்பட்டது.+
22 மோசேயின் திருச்சட்டப்படி அவர்கள் தூய்மைச் சடங்கு செய்வதற்கான சமயம் வந்தபோது,+ அந்தக் குழந்தையை யெகோவாவின்* சன்னிதியில் காட்டுவதற்காக அதை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
-