-
லேவியராகமம் 11:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 எதன் மேலாவது அந்தப் பிராணிகள் செத்து விழுந்தால் அது தீட்டாகிவிடும். மரப் பாத்திரமானாலும், உடையானாலும், தோலினால் அல்லது மிருக ரோமத்தால் செய்யப்பட்ட துணியானாலும், அது தீட்டாகிவிடும். நீங்கள் பயன்படுத்துகிற எந்தப் பொருளின் மேல் அவை விழுந்தாலும் அந்தப் பொருளைத் தண்ணீருக்குள் போட்டுவைக்க வேண்டும். சாயங்காலம்வரை அது தீட்டாக இருக்கும். அதன்பின் சுத்தமாகும். 33 அவை மண்பாத்திரத்தில் விழுந்தால், அதற்குள் என்ன இருந்தாலும் அது தீட்டுதான். அந்தப் பாத்திரத்தை நீங்கள் உடைத்துவிட வேண்டும்.+
-