2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ மோளேகு தெய்வத்துக்குத் தன் பிள்ளையை அர்ப்பணித்தால்,* அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனை நீங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.
7 அதன் பிறகு, மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான தெய்வமாகிய கேமோஷுக்கு அவர் ஓர் ஆராதனை மேட்டைக்+ கட்டினார். அம்மோனியர்கள் வணங்கிய+ அருவருப்பான தெய்வமாகிய மோளேகுக்கும்+ ஓர் ஆராதனை மேட்டைக் கட்டினார். இவற்றை எருசலேமுக்கு முன்னாலிருந்த மலையில் கட்டினார்.
10 பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்*+ இருந்த தோப்பேத்தை*+ இனி வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி யோசியா ராஜா செய்தார்; யாரும் தன்னுடைய மகனையோ மகளையோ மோளேகு தெய்வத்துக்கு நெருப்பில் பலி கொடுக்கக் கூடாது*+ என்பதற்காக இப்படிச் செய்தார்.