-
நியாயாதிபதிகள் 19:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அவர்கள் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த நகரத்திலிருந்த போக்கிரிகள் சிலர் அவருடைய வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைப் பலமாகத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான பெரியவரிடம், “உன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிற ஆளை வெளியே கொண்டுவா, நாங்கள் அவனோடு உறவுகொள்ள வேண்டும்”+ என்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.
-
-
ரோமர் 1:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 அதனால்தான், கேவலமான காமப்பசிக்கு+ இணங்கிவிடும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். அவர்கள் மத்தியிலுள்ள பெண்கள் இயல்பான முறையில் உறவுகொள்வதை விட்டுவிட்டு இயல்புக்கு மாறான முறையில் உறவுகொண்டார்கள்.+ 27 அதேபோல், ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவுகொள்வதை விட்டுவிட்டு, ஒருவர்மீது ஒருவர் மோகம்கொண்டு காமத்தீயில் பற்றியெரிந்தார்கள். ஆண்கள் ஆண்களோடு ஆபாசமாக நடந்து,+ தங்களுடைய தவறுக்குத் தகுந்த தண்டனையை முழுமையாகப் பெற்றார்கள்.+
-
-
1 கொரிந்தியர் 6:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ சிலையை வணங்குகிறவர்கள்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள்,+ ஆண் விபச்சாரக்காரர்கள்,*+ ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள்,+ 10 திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+
-
-
யூதா 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதேபோல், சோதோம் கொமோராவிலும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களிலும் வாழ்ந்த மக்கள் அந்தத் தேவதூதர்களைப் போல் பாலியல் முறைகேட்டில்* மூழ்கியிருந்தார்கள். இயற்கைக்கு மாறான பாலியல் பழக்கங்களில் ஈடுபட்டார்கள்.+ அதனால், என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உதாரணம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது.+
-