22 அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டும். சிக்கலான வழக்குகளுக்கு மட்டும் நீயே தீர்ப்பு சொல்.+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்கள் தீர்ப்பு சொல்லட்டும். இப்படி, உன்னுடைய சுமையை அவர்களுடன் பகிர்ந்துகொள், உன்னுடைய பாரம் குறையும்.+