-
லேவியராகமம் 25:25-27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 உங்களுடைய சகோதரன் ஏழையாகி தன்னுடைய நிலத்தில் கொஞ்சத்தை விற்றுவிட்டால், அவனுடைய நெருங்கிய சொந்தக்காரன் வந்து அதை மீட்க வேண்டும்.+ 26 அப்படி மீட்க யாரும் இல்லாவிட்டால், அதை மீட்கும் அளவுக்கு அவனுக்கே வசதி வந்துவிட்டால், 27 நிலத்தை விற்ற வருஷத்திலிருந்து அதில் விளைந்ததன் மதிப்பை அவன் கணக்குப் பார்த்து, அந்தத் தொகையைக் கழித்துவிட்டு மீதி தொகையை மட்டும் விலையாகக் கொடுக்க வேண்டும். பின்பு, அவன் தன்னுடைய நிலத்துக்குத் திரும்பிப்போகலாம்.+
-