உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்களைத் தாக்க வருகிற எதிரிகளை யெகோவா தோற்கடிப்பார்.+ ஒரு திசையில் அவர்கள் உங்களைத் தாக்க வருவார்கள், ஆனால் ஏழு திசைகளில் உங்களைவிட்டு ஓடிப்போவார்கள்.+

  • யோசுவா 23:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்காகப் போர் செய்வார்.+ அப்போது, உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்தியடிப்பான்.+

  • நியாயாதிபதிகள் 7:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அந்தக் கனவையும் அதற்கான விளக்கத்தையும் கிதியோன் கேட்டவுடன்+ மண்டிபோட்டு கடவுளை வணங்கினார். அதன்பின், இஸ்ரவேலர்களின் முகாமுக்குத் திரும்பி வந்து, “புறப்படுங்கள், மீதியானியர்களின் படையை யெகோவா உங்கள் கையில் கொடுத்துவிட்டார்” என்று சொன்னார். 16 பின்பு, அந்த 300 வீரர்களையும் மூன்று பிரிவாகப் பிரித்து, அவர்கள் எல்லாருடைய கையிலும் ஓர் ஊதுகொம்பையும்+ ஒரு பெரிய ஜாடியையும் கொடுத்தார். அந்த ஜாடிக்குள் ஒரு தீப்பந்தத்தை வைத்துக் கொடுத்தார்.

  • நியாயாதிபதிகள் 15:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் கழுதையின் பச்சைத் தாடை எலும்பைப் பார்த்தார். உடனே, அதை எடுத்து 1,000 பேரைக் கொன்றார்.+ 16 அதன்பின் சிம்சோன்,

      “கழுதையின் தாடை எலும்பால் பிணங்களைக் குவியல்களாகக் குவித்தேன்!

      கழுதையின் தாடை எலும்பால் 1,000 பேரைக் கொன்றுபோட்டேன்!”+

      என்று சொன்னார்.

  • 1 நாளாகமம் 11:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யோவாபின்+ சகோதரனாகிய அபிசாய்,+ இன்னும் மூன்று மாவீரர்களுக்குத் தலைவரானார். அவர் தன்னுடைய ஈட்டியால் 300 பேரைக் கொன்றுபோட்டார். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்