17 நகரத்தையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் அழிக்க வேண்டும்.+ அவை எல்லாமே யெகோவாவுக்குச் சொந்தம். நாம் அனுப்பிய உளவாளிகளை ராகாப்+ என்ற விலைமகள் ஒளித்துவைத்துக் காப்பாற்றியதால்,+ அவளையும் அவள் வீட்டில் இருக்கிறவர்களையும் மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள்.
3 இப்போது நீ போய் அமலேக்கியர்களை வெட்டித்தள்ளு.+ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் என எல்லாரையும் கொன்றுபோடு.*+ அவர்களுக்குச் சொந்தமான ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், மற்ற எல்லாவற்றையும் அழித்துவிடு’”+ என்று சொன்னார்.
18 பிற்பாடு, யெகோவா உனக்கு ஒரு வேலை கொடுத்து, ‘நீ போய் இந்தப் பொல்லாத அமலேக்கியர்களை அழித்துப்போடு.+ அவர்களோடு போர் செய்து அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டு’+ என்று சொன்னார், இல்லையா?