3 அதோடு நீ அவர்களிடம், ‘குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் இரண்டை ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குத் தகன பலியாக நீங்கள் செலுத்த வேண்டும். அதுதான் தினமும் செலுத்தப்படுகிற* தகன பலி.+
7 அதனோடு சேர்த்து திராட்சமதுவைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டிக்காகவும் ஒரு லிட்டர் திராட்சமதுவைச் செலுத்த வேண்டும்.+ யெகோவாவுக்குக் காணிக்கையாக அதைப் பலிபீடத்தில்* ஊற்ற வேண்டும்.