23 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை+ அடைந்து, அங்கே ஒரு திராட்சைக் கொடியிலிருந்த ஒரு குலையை அறுத்தார்கள். அதை இரண்டு பேர் ஒரு கம்பத்தில் கட்டித் தூக்கிக்கொண்டு வர வேண்டியிருந்தது. சில மாதுளம்பழங்களையும் அத்திப்பழங்களையும்கூட அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.+