16 பிரகார நுழைவாசலில் ஒரு திரையைத் தொங்கவிட வேண்டும். நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை+ ஆகியவற்றால் 20 முழ நீளத்துக்கு அதைச் செய்ய வேண்டும். அதற்கு நான்கு கம்பங்களையும் நான்கு பாதங்களையும் செய்ய வேண்டும்.+