13 கீலேயாத்தின் இன்னொரு பாதியையும் ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த பாசான் பகுதி முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குக் கொடுத்தேன்.+ பாசானைச் சேர்ந்த அர்கோப் பிரதேசம் முழுவதும் ரெப்பாயீமியர்களின் தேசம் என்று அழைக்கப்பட்டது.
17பின்பு, யோசேப்பின் மூத்த மகனாகிய+ மனாசேயின்+ கோத்திரத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மனாசேயின் மகனும் கீலேயாத்தின் அப்பாவுமான மாகீர்+ பெரிய வீரராக இருந்ததால், அவருக்கு கீலேயாத்தும் பாசானும்+ கிடைத்தன.