-
எண்ணாகமம் 32:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அப்போது காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும்+ யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும்,+ எமோரியர்களின் ராஜாவான சீகோனின் ராஜ்யத்தையும்+ பாசானின் ராஜாவான ஓகின் ராஜ்யத்தையும்+ மோசே கொடுத்தார். அதாவது, அவர்களுடைய நகரங்களையும் அங்கிருந்த ஊர்களையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் கொடுத்தார்.
-
-
உபாகமம் 3:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அந்தச் சமயத்தில், அர்னோன் பள்ளத்தாக்கின்* பக்கத்தில் உள்ள ஆரோவேர்+ தொடங்கி கீலேயாத் மலைப்பகுதியின் பாதி வரையுள்ள தேசத்தை நாம் சொந்தமாக்கிக்கொண்டோம். அங்கிருந்த நகரங்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் நான் கொடுத்தேன்.+ 13 கீலேயாத்தின் இன்னொரு பாதியையும் ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த பாசான் பகுதி முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குக் கொடுத்தேன்.+ பாசானைச் சேர்ந்த அர்கோப் பிரதேசம் முழுவதும் ரெப்பாயீமியர்களின் தேசம் என்று அழைக்கப்பட்டது.
-