22 செய்யக் கூடாதென்று யெகோவா சொன்ன ஏதோவொன்றைக் கோத்திரத் தலைவர்+ ஒருவர் தெரியாத்தனமாகச் செய்து குற்றத்துக்கு ஆளானால், 23 அல்லது தான் செய்த ஒரு பாவத்தைப் பற்றிப் பிற்பாடு உணர்ந்தால், எந்தக் குறையுமில்லாத ஒரு வெள்ளாட்டுக் கடாக் குட்டியைப் பலியாகக் கொண்டுவர வேண்டும்.