10 ஆடுகள் இணைசேரும் காலத்தில், நான் ஒரு கனவு கண்டேன். அதில், வெள்ளாடுகளோடு இணைசேரும் கடாக்கள் வரிகளுடனோ புள்ளிகளுடனோ கலப்பு நிறத்துடனோ இருந்ததைப் பார்த்தேன்.+ 11 அந்தக் கனவில் உண்மைக் கடவுளுடைய தூதர், ‘யாக்கோபே!’ என்று கூப்பிட்டார். நான் உடனே, ‘சொல்லுங்கள், எஜமானே!’ என்றேன்.