-
உபாகமம் 1:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 நாம் போகப்போகிற இடம் எப்படி இருக்குமோ? அதைப் பார்த்துவிட்டு வந்த நம் சகோதரர்கள், “அங்கிருக்கிற ஆட்கள் நம்மைவிட பலசாலிகள், உயரமானவர்கள். அவர்களுடைய நகரங்கள் ரொம்பவே பெரியதாக இருக்கின்றன. அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு உயரமாக இருக்கின்றன.+ அங்கே நாங்கள் ஏனாக்கியர்களைப்+ பார்த்தோம்” என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்புகிறார்களே’+ என்று புலம்பினீர்கள்.
-
-
உபாகமம் 9:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 பின்பு அவர், “இஸ்ரவேலர்களே, கேளுங்கள். இன்றைக்கு நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்,+ உங்களைவிட பெரியதாகவும் பலம்படைத்ததாகவும் இருக்கிற தேசங்களைக் கைப்பற்றப்போகிறீர்கள்.+ அங்கிருக்கிற நகரங்கள் மாபெரும் நகரங்கள், வானத்தைத் தொடுமளவுக்கு உயரமான மதில்கள் உள்ள நகரங்கள்.+ 2 அங்கு ஏராளமான ஏனாக்கியர்கள் இருக்கிறார்கள்.+ அவர்கள் மிகவும் உயரமானவர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். அவர்களோடு மோத யாராலும் முடியாது என்று ஜனங்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறீர்கள்.
-