28 என் சன்னிதியில் குருவாகச் சேவை செய்யவும், என் பலிபீடத்தில்+ பலிகள் செலுத்தவும், தூபம் காட்டவும், ஏபோத்தைப் போட்டுக்கொள்ளவும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திலிருந்தும் உன் மூதாதையைத் தேர்ந்தெடுத்தேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் கொண்டுவந்த தகன பலிகளில் அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் பங்கு கொடுத்தேன்.+