-
எண்ணாகமம் 32:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அப்போது காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும்+ யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும்,+ எமோரியர்களின் ராஜாவான சீகோனின் ராஜ்யத்தையும்+ பாசானின் ராஜாவான ஓகின் ராஜ்யத்தையும்+ மோசே கொடுத்தார். அதாவது, அவர்களுடைய நகரங்களையும் அங்கிருந்த ஊர்களையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் கொடுத்தார்.
-
-
உபாகமம் 29:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 கடைசியாக, நீங்கள் இங்கே வந்துசேர்ந்தீர்கள். எஸ்போனின் ராஜா சீகோனும்+ பாசானின் ராஜா ஓகும்+ நம்மோடு போர் செய்ய வந்தார்கள், ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம்.+ 8 அதன்பின், அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றி ரூபன் கோத்திரத்துக்கும், காத் கோத்திரத்துக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சொத்தாகக் கொடுத்தோம்.+
-