-
1 நாளாகமம் 28:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 சாலொமோனே, என் மகனே, உன் அப்பாவின் கடவுளை நன்றாகத் தெரிந்துகொள், அவருக்கு முழு இதயத்தோடு+ சந்தோஷமாக* சேவை செய். யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.+ மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+ நீ அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.+ நீ அவரை விட்டுவிட்டால், அவரும் உன்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்.+
-
-
2 நாளாகமம் 24:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 குருவாகிய யோய்தாவின்+ மகன் சகரியாமீது கடவுளுடைய சக்தி வந்தது. அப்போது அவர் ஓர் உயரமான இடத்தில் நின்றுகொண்டு மக்களைப் பார்த்து, “உண்மைக் கடவுள் சொல்வது என்னவென்றால், ‘ஏன் யெகோவாவின் கட்டளைகளை மீறி நடக்கிறீர்கள்? அவருடைய கட்டளைகளை மீறினால் நீங்கள் செய்கிற எதிலும் வெற்றி கிடைக்காது. நீங்கள் யெகோவாவை ஒதுக்கிவிட்டீர்கள், அதனால் அவரும் உங்களை ஒதுக்கிவிடுவார்’”+ என்று சொன்னார்.
-