32 பூமியிலுள்ள ராஜ்யங்களே, கடவுளைப் போற்றிப் பாடுங்கள்.+
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள். (சேலா)
33 காலம்காலமாக இருக்கிற வானாதி வானங்களிலே பவனி வருகிறவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+
இதோ! அவர் தன்னுடைய கம்பீரமான குரலில் இடிபோல் முழங்குகிறார்.
34 கடவுள் பலம்படைத்தவர் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.+
அவருடைய மகிமை இஸ்ரவேலின் மேல் இருக்கிறது.
அவருடைய பலம் வானத்தில் இருக்கிறது.