16 யெகோவாவின் பெயரைப் பழித்துப் பேசுகிறவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கண்டிப்பாகக் கல்லெறிய வேண்டும். கடவுளுடைய பெயரைப் பழிப்பவன் இஸ்ரவேலனாக இருந்தாலும் சரி, இஸ்ரவேலர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவன் கொல்லப்பட வேண்டும்.