19 ஆபிரகாமை எனக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவின் வழியில் நடக்கும்படி அவன் தன்னுடைய மகன்களுக்கும் வருங்காலச் சந்ததிகளுக்கும் நிச்சயமாகக் கட்டளை கொடுப்பான். அவர்களை நீதியோடும் நியாயத்தோடும் நடக்கச் சொல்வான்.+ அதனால், ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுவார்” என்று சொன்னார்.
9 உங்கள் கண்களால் பார்த்தவற்றை மறந்துவிடாதபடி மிகக் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். இவை உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கக் கூடாது. இவற்றை உங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.+
4 அப்பாக்களே, உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்.+ அதற்குப் பதிலாக, யெகோவா* சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து,*+ அவர் தருகிற புத்திமதியின்படி* வளர்த்து வாருங்கள்.+