16 “அவர்கள் பாகாலின் பெயரில் சத்தியம் செய்ய என் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தது போலவே, ‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை’ என்று சத்தியம் செய்ய அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என் ஜனங்களைப் போலவே என் வழியில் நடக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்களை என் ஜனங்களோடு சீரும் சிறப்புமாக வாழ வைப்பேன்.