-
உபாகமம் 6:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 உங்கள் முன்னோர்களான ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு வந்து,+ நீங்கள் கட்டாத பிரமாண்டமான நகரங்களையும்,+ 11 நீங்கள் உழைத்துச் சம்பாதிக்காத நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், நீங்கள் வெட்டாத கிணறுகளையும்,* நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ மரங்களையும் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருப்பீர்கள்.+ 12 இதெல்லாம் நடக்கும்போது, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுதலை செய்த யெகோவாவை மறந்துவிடாதபடி கவனமாக இருங்கள்.+
-