40 நான் இன்று உங்களுக்குச் சொல்கிற அவருடைய விதிமுறைகளையும் கட்டளைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், நீங்களும் உங்களுடைய சந்ததியாரும் சந்தோஷமாக இருப்பீர்கள், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்”+ என்று சொன்னார்.