2 “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+
26 யெகோவாவாகிய நான் பரிசுத்தமாக இருப்பதால், நீங்களும் என்முன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ நீங்கள் என் சொந்த ஜனங்களாய் இருப்பதற்காக மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.+
9 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ உங்களைத் தன்னுடைய பரிசுத்தமான ஜனமாக ஆக்குவார்.+