25 அவர்களுடைய தெய்வச் சிலைகளை நீங்கள் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+ அவற்றிலுள்ள வெள்ளிக்கும் தங்கத்துக்கும் ஆசைப்பட்டு அவற்றை எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ அப்படிச் செய்தால் ஆபத்தில்* சிக்கிக்கொள்வீர்கள். ஏனென்றால், அவை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவை.+