4 அவர் அதன் பக்கத்தில் வருவதை யெகோவா பார்த்தபோது அந்த முட்புதரிலிருந்து, “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அதற்கு மோசே, “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 5 அப்போது கடவுள் அவரிடம், “பக்கத்தில் வராதே. உன் செருப்பைக் கழற்று. ஏனென்றால், நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது” என்றார்.