-
யோசுவா 6:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 நகரத்தையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் அழிக்க வேண்டும்.+ அவை எல்லாமே யெகோவாவுக்குச் சொந்தம். நாம் அனுப்பிய உளவாளிகளை ராகாப்+ என்ற விலைமகள் ஒளித்துவைத்துக் காப்பாற்றியதால்,+ அவளையும் அவள் வீட்டில் இருக்கிறவர்களையும் மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள். 18 ஆனால், அழிக்க வேண்டிய எந்தப் பொருளின் பக்கத்திலும் போகாதீர்கள்.+ அப்படிப் போனால், அழிக்க வேண்டிய பொருள்கள் எதையாவது ஆசைப்பட்டு எடுத்துக்கொள்வீர்கள்.+ இதனால், இஸ்ரவேலர்களின் முகாமுக்கே அழிவைக் கொண்டுவந்துவிடுவீர்கள். அது அடியோடு அழிந்துபோகும்படி செய்துவிடுவீர்கள்.+
-