19 அப்போது, யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்றார்.+ உடனே, அவர் அஸ்கலோனுக்குப்+ போய் 30 ஆட்களைக் கொன்று, அவர்களுடைய உடைகளை எடுத்து, தன் விடுகதைக்குப் பதில் சொன்னவர்களுக்குக் கொடுத்தார்.+ பின்பு, பயங்கர கோபத்தோடு தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப்போனார்.