19 அந்த எல்லை பெத்-ஓக்லாவின்+ வடக்கு மலைச் சரிவுவரை போய், யோர்தானின் தென்முனையில் உள்ள உப்புக் கடலின்+ வடக்கு விரிகுடாவில் முடிவடைந்தது. இதுதான் தெற்கு எல்லை. 20 யோர்தான் அதன் கிழக்கு எல்லையாக இருந்தது. பென்யமீன் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி நாலாபக்கமும் கிடைத்த எல்லை இதுதான்.