11 பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி குலுக்கல் முறையில் பங்கு கிடைத்தது. யூதா வம்சத்தாருக்கும்+ யோசேப்பின் வம்சத்தாருக்கும்+ இடையே அவர்களுக்குப் பங்கு கிடைத்தது.
13 அங்கிருந்து லஸ்ஸின் தென் சரிவுவரை, அதாவது பெத்தேல்வரை,+ போனது. பின்பு அது இறங்கி, கீழ் பெத்-ஓரோனுக்குத்+ தெற்கே, மலைமேல் உள்ள அதரோத்-அதாருக்குப்+ போனது.