20 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும், அவருக்கு மட்டும்தான் சேவை செய்ய வேண்டும்,+ அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும், அவருடைய பெயரில்தான் சத்தியம் செய்ய வேண்டும்.
4 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியில் நீங்கள் நடக்க வேண்டும், அவருக்குப் பயப்பட வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும், அவரையே வணங்க வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.+
8 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை* மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.