22 ஆனால், இஸ்ரவேலர்களில் யாரையும் அடிமையாக்கவில்லை.+ ஏனென்றால் அவர்கள் சாலொமோனுடைய போர்வீரர்களாக, ஊழியர்களாக, தலைவர்களாக, படை அதிகாரிகளாக, அவருடைய ரதவீரர்களுக்கும் குதிரைவீரர்களுக்கும் தலைவர்களாக இருந்தார்கள்.
26 ரதங்களையும் குதிரைகளையும்* சாலொமோன் ஏராளமாகச் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவரிடம் 1,400 ரதங்களும் 12,000 குதிரைகளும்* இருந்தன.+ ரதங்களுக்கான நகரங்களிலும் எருசலேமில் ராஜா குடியிருந்த இடத்துக்குப் பக்கத்திலும் அவற்றை நிறுத்தி வைத்தார்.+