21 யெகோவா தான் சொன்னபடியே சாராளுக்குக் கருணை காட்டினார். அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார்.+ 2 அதனால் சாராள் கர்ப்பமாகி,+ வயதான ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி கொடுத்தபடியே குறித்த காலத்தில் இது நடந்தது.+