12 அதனால், நீ கேட்டபடியே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை உனக்குத் தருவேன்.+ உன்னைப் போல் ஞானமுள்ளவர் உனக்கு முன்பும் இருந்ததில்லை, உனக்குப் பின்பும் இருக்கப்போவதில்லை.+
5 உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்;+ அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட* மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.+