9 இந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரம்முதல் உட்கூரைவரை எல்லாமே அளந்து செதுக்கப்பட்ட விலைமதிப்புள்ள கற்களால் கட்டப்பட்டன.+ பெரிய பிரகாரம்வரை+ எல்லாமே இந்தக் கற்களால்தான் கட்டப்பட்டன. இந்தக் கற்களின் எல்லா பக்கங்களும் கல் அறுக்கும் ரம்பத்தால் சீராக வெட்டப்பட்டிருந்தன.
2 இஸ்ரவேலில் குடியிருக்கும் மற்ற தேசத்து மக்களை+ ஒன்றுகூட்டச் சொல்லி தாவீது கட்டளையிட்டார்; பின்பு, உண்மைக் கடவுளின் ஆலயத்துக்குத் தேவையான கற்களை வெட்டிச் செதுக்கும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தார்.+